கிராம சேவையாளருடன் கலந்துரையாடல்

வனிதா:    வணக்கம் ஐயா!

கிராம சேவகர்:    வணக்கம் நலமாக உள்ளீர்களா வனிதா?

 

வனிதா:   ஆம். நலமாக உள்ளேன்.

கிராம சேவகர்:    இப்போது டெங்கு நுளம்புப் பிரச்சனை எப்படி உள்ளது?

 

வனிதா:    புற்காடுகளை வெட்டி சுத்தமாக்க நீங்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி ஐயா!

கிராம சேவகர்:    அது எனது கடமை. ஊருக்காக செய்தேன்.

 

வனிதா:    இப்போது நுளம்பின் தொல்லைகள் குறைவாக உள்ளது.

கிராம சேவகர்:    நல்லது. தொடர்ந்து அப்படியே சுத்தாமாக வைத்திருங்கள்.

வனிதா:  கட்டாயம் சுத்தமாக்கி அழகாக வைத்திருப்போம்.

கிராம சேவகர்:  உங்கள் பிள்ளைக்கு இப்போது டெங்குக் காய்ச்சல் எப்படி உள்ளது?

 

வனிதா:   உடனடியாக மருந்து எடுத்ததால் தற்போது காய்ச்சல் குறைவாக உள்ளது.

கிராம சேவகர்:  அயலாருக்கும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

 

வனிதா:   கண்டிப்பாக மற்றவர்களுக்கும் நான் சுத்தமாக இருக்கும் படியும் டெங்கு நோய் தொடர்பாகவும் கூறுகின்றேன்.

கிராம சேவகர்:   இன்று என்னைக் காண வந்தமைக்கான காரணம் என்ன வனிதா? ஏதும் கோரிக்கைகள் உண்டா?

 

வனிதா:   ஆம் ஐயா! எமது தெருவில் உள்ள் மின்விளக்கு ஒன்று அனைந்துள்ளது.

கிராம சேவகர்:  எப்போது இது இடம் பெற்றது?

வனிதா:   நேற்று மாலை 06.00 மணியளவில் மழை பெய்து ஓய்ந்ததன் பின் மின்விளக்கு ஒளிரவில்லை.

கிராம சேவகர்:    நன்றாக மின் ஆழியை இயக்கிப் பார்த்தீர்களா?

 

வனிதா:   ஆம். பலர் இயக்கிப் பார்த்தும் மின்விளக்கு  ஒளிரவில்லை.

கிராம சேவகர்:    சரி. மின்சார சபைக்குத் தெரிவித்தீர்களா?

 

 வனிதா:   ஆம், தெரிவித்து விட்டோம். ஆனால் இன்னமும் யாரும் வரவில்லை. இரவில் கடைத் தெருக்கு போய் வருவதும் தெருவில் உள்ள நீர்க்குழாயில் குளிப்பதும் சிரமமாகவுள்ளது.

கிராம சேவகர்:    சரி. நானும் மின்சார சபையைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் உங்கள் தெருவிற்கு வருகின்றேன்.

 

வனிதா:   சரி ஐயா! மிக்க நன்றி. சென்று வருகிறேன்.

கிராம சேவகர்:    சென்று வாருங்கள் வனிதா!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Select your currency
USD United States (US) dollar